இலங்கையில் என்ன நடந்ததோ..அதே தான் தமிழகத்திலும் நடக்கும்: கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை

Report Print Santhan in இந்தியா

தமிழ் பெண் ஒருவர் இன்னொரு ஈழம் உருவாகிவிடக் கூடாது என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டங்களின்போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தால் தமிழகமே தற்போது பதற்றமான நிலையில் உள்ளதால், இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் படி முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஒருவர் சமூகவலைத்தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கையில் என்ன நடந்ததோ, அதே தான் தமிழ் நாட்டிலும் நடக்கும் எனவும், தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று இல்லை.

முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்று உள்ளது. இங்கு இன்னும் ஒரு ஈழம் உருவாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers