ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போது மனது கொதிக்கிறது: வெளிநாட்டிலிருந்து தமிழர்களுக்கு குரல் கொடுத்த பெண்

Report Print Santhan in இந்தியா

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தூத்துக்குடி போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து மிகவும் ஆதங்கமாக பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தற்போது வரை 11 பேர் பலியாகியுள்ள நிலையில், பொலிசார் இன்றும் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூகவலைத்தளம் ஒன்றில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? ஒவ்வொரு வீடியோவையும், புகைப்படத்தையும் பார்க்கும் போது மனது கொதிக்கிறது, இதே போல் உங்கள் வீட்டில் ஒருவர் இறந்து அதன் பின் அதற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று அரசிடம் கேள்வியும் கேட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்