தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை இராணுவத்தை அனுப்புமாறு தலைமை செயலாளர் கிரிஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது, பொதுமக்கள் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க துணை இராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.