நடிக்காதே, எழுந்து ஓடு! இளைஞரை சுட்டு கொன்றுவிட்டு இறந்தவரிடம் பேசிய பொலிஸ்: அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்று பொலிசார் நடிக்காதே என்று கூறியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொலிசார் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஒருவர் பலியாகினார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, இறந்த கிடந்த இளைஞரிடம் அங்கிருந்த பொலிசார் ஒருவர் நடிக்காதே எழுந்து ஓடு என்று பேசியுள்ளார்.

அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசிடம் இராணுவங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...