போராட்டகளத்தில் இடுப்பில் பாய்ந்த குண்டு பின்வழியாக வந்தது: பாதிரியார் உருக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பாதிரியார் ஜெயசந்திரன் குண்டுபாய்ந்து இறந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக உருக்கமாக வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டுள்ளார்.

பொலிசார், சுட்டதில் ஜெயசந்திரனின் இடுப்பில் குண்டு பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தோம் என அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர்,

இந்நிலையில், இவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானதையடுத்து, நான் நலமுடன் இருக்கிறேன், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

அவரின் இடுப்பில் பாய்ந்த குண்டு பின்வழியாக வெளியேறிவிட்டதால், நிலைகுலைந்து விழுந்துள்ளார். பாதிரியார் ஜெயசந்திரனுடன் பலர் இருந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் எல்லோரும் ஓடிவிட்டனர்.

அறவழியில், அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது எதற்காக பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்? இது அநியாயமான ஒன்று என அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...