ஒரு மகன் இரத்த வெள்ளத்தில்..மற்றொரு மகன் கஸ்டடியில்: தூத்துக்குடியில் வேதனையில் துடிக்கும் தாய்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் தூத்துக்குடி போராட்டத்தில் பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 65 பேருக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் துப்பாக்கிசூட்டிற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரும் பலியாகியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் இருந்தே இவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகிறார். துப்பாக்கி குண்டு இவரது நெற்றியில் பாய்ந்து ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசனின் அண்ணனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு மகன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிவிட்டார். மற்றொரு மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரின் தாய், தற்போது தன் மகனின் சடலத்தை வாங்க மறுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மருத்துவமனையில் போராடி வருகிறார்.

மூளை சிதறி இறந்துகிடந்த தனது மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers