என் மகனை விட்டுவிடுங்கள்..நான் செத்துடுவேன்: தூத்துக்குடியில் பொலிசாரின் காலை பிடித்து கெஞ்சிய தாய்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் என் மகனை விட்டுவிடுங்கள் என்று தாய் ஒருவர் கெஞ்சும் காட்சி பார்ப்போரை கண்ணீர் வரவைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொதுமக்களை நோக்கி பொலிசார் சுட்டதால், தற்போதுவரை 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் காலில் விழுந்து தன் மகனை விட்டுவிடுங்கள் என தாய் ஒருவர் கதறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதில், ஐயா என் பையன விடுங்கய்யா, பெரிய ஐயா என பையன விடுங்க. இல்லையென்றால் நான் அழுதே செத்துடுவேன். என் பையன் வேலை பாக்குறான்.

படித்து கோயம்பத்தூர் போகப்போறான்யா. எனக்கு இருக்குறது 2 மகன்தான். இரண்டு பேரையும் இரவு வந்து தூக்கிட்டு போய்டீங்களே, விட்டுறங்க ஐயா என காவல்துறையினரின் காலில் விழுந்து கதறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers