மின்சாரம், இணையம் துண்டிப்பு: தூத்துக்குடியில் வீடு வீடாக சென்று வேட்டையாடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

மின்சாரம் மற்றும் இணைய சேவை துண்டிப்புக்கு பின்னர் போராட்டக்கரர்களை ஒடுக்க பொலிசார் வீடு வீடாக சென்று வேட்டையாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதன் 100-வது நாளில் நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட ஆட்சியாளரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டமானது கலவரமாக வெடித்ததில் பொலிசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

பொதுமக்களின் போராட்டத்தை அடக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இணையம் மற்றும் மின்சாரத்தை தமிழக அரசு துண்டித்துள்ளது.

இந்த நிலையில் கலவரத்தை ஒடுக்குவதாக கூறி பொலிசார் வீடு வீடாக சென்று அப்பாவி இளைஞர்களையும் சிறுவர்களையும் வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers