துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த தம்பி: கலங்கிய நடிகர் தனுஷ்

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசார் 13 பேரை சுட்டு கொன்றனர்.

இதில் ரகு என்ற இளைஞரும் ஒருவராவார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரகுவின் மரணத்துக்கு தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.

அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...