உயிரிழப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து ஆலை இயங்கும்: ஸ்டெர்லைட் உரிமையாளர் பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் 13 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட்டின் இயக்குநரான அனில் அகர்வால் இச்சம்பவம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

அரசு ஆணைப்படி அனைத்து விதிகளையும் கடைபிடித்து வருவதோடு, அரசு மற்றும் நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஆலையை மீண்டும் திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அனைத்து சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதாகவும், தூத்துக்குடி மக்களின் விருப்பத்துடனே மீண்டும் ஆலை திறக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...