தூத்துக்குடியில் தொடரும் வன்முறை: கமாண்டோ படையினர் குவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13-ஐ தொட்டிருக்கிறது.

இதனால், தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

3 வது நாளான இன்றும் வன்முறை தொடர்ந்து வருவதால், தூத்துக்குடி அண்ணா நகரில் கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பொலிசார் 500 பேருடன் கமாண்டோ படையினர் 100 பேர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers