தூத்துக்குடியில் 68 பேரை கைது செய்த பொலிசார்: முக்கிய பிரபலங்கள் மீது வழக்கு பதிவு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 68 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று முன் தினம் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன் காரணமாக 13 பேர் பலியாகியிருந்த நிலையில், நேற்றும் தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற வன்முறை சசம்பவத்தில் ஈடுபட்ட 65 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக் குடியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டிருந்தும், தடையை மீறி மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கமல் ஆகியோர் சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர காமெண்டோ படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers