தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என கலெக்டர் அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் நடந்த வன்முறையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்புநிலையை கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers