ஆபாசப்பட மிரட்டலால் உயிரை விட்ட மாணவி: கதறி துடிக்கும் பெற்றோர்

Report Print Raju Raju in இந்தியா

கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.டெக் பயின்ற மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்களது மகள் தற்கொலைக்கு மணிவண்ணன் என்பவர் தான் காரணம் என அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

தங்கள் மகளை ஆபாசமாக செல்போனில் படம்பிடித்து மிரட்டி மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் கூறியுள்ளார். புகாரையடுத்து தலைமறைவாக உள்ள மணிவண்ணனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்