பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை 3-வது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 18-ந் திகதி அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்