குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை: இரத்த வெள்ளத்தில் கிடந்த பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர்-பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு நண்பர்களால படு கொலை செய்யப்பட்டதால், இவரது மனைவி மலர் இரு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.

இந்நிலையி மலர் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் கொடூர முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்