தூத்துக்குடியில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு: மீண்டும் பதற்றம்

Report Print Arbin Arbin in இந்தியா

தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் மர்ம நபர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட வன்முறையை தடுக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் அங்கு இன்று முதல் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை செல்லும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் பயணிகள் இருந்த நிலையில் அங்கு வந்த சிலர் பெட்ரோலை ஊற்றி பேருந்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து கொழுந்து விட்டு எரிவதை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்