தமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொது தேர்வுகள்: முடிவுகள் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா
33Shares
33Shares
ibctamil.com

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு எனப்படும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 91.3 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்தாண்டு பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.

அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

முந்தைய ஆண்டு வரை 1,200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு நடப்பு கல்வியாண்டில் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.

இந்தாண்டு 8 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.9% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.4% ஆகவும், மெட்ரிக் பள்ளிகளில் 98.6% ஆகவும், இருபாலர் பள்ளிகளில் 91.6% ஆகவும், பெண்கள் பள்ளிகளில் 94.9% ஆகவும், ஆண்கள் பள்ளிகளில் 80.9% ஆகவும் தேர்ச்சி விதிகம் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்