ஆடைகளை களைந்து நிர்வாணமாக நில்: 1 மணிநேரம் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் மும்பை செல்வதற்காக ஓலா டாக்ஸியை புக் செய்துள்ளார்.

அருண் என்ற டிரைவர் காருடன் வீட்டில் இருந்து பெண்ணை பிக்அப் செய்தார், ஆனால், வேறு பாதையில் காரை ஒட்டிச்சென்றதால் எதற்காக இவ்வாறு செல்கிறீர்கள் என கேட்டவுடன், தனது வேலையை காட்டியுள்ளார் ஓட்டுநர்.

ஆடைகளை களைந்து நிர்வாணமாக தன் முன்னால் நிற்காவிட்டால், எனது நண்பர்களுக்கு போன் செய்து கூப்பிடுவேன். அவர்களும், நானும் உன்னை கூட்டாக பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார்.

உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த பெண், தனது ஆடைகளை களைந்துள்ளார். இதையடுத்து நிர்வாணமாக அவரை பல கோணங்களில் தனது செல்போனில் போட்டோ எடுத்த அருண், தனது வாட்ஸ்அப் எண்ணுக்கும் அதை அனுப்பியுள்ளார். இதன்பிறகு, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

சுமார் 1 மணிநேரம் சித்ரவதை அனுபவித்துள்ளார்.

சூழ்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை எப்படியாவது விமானநிலையத்தில் விட்டுவிடுமாறும், நடந்தது பற்றி யாருக்கும் சொல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து விமானநிலையத்தில் கொண்டு சென்றுவிட்ட அருண், நடந்ததை வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிவிட்டு திரும்பியுள்ளார்.

பொலிஸ் கமிஷனர், சுனில்குமாருக்கு அனுப்பியுள்ளார். புகாரில், கார் மற்றும் டிரைவர் பற்றிய விவரங்களையும் அப்பெண் இணைத்து அனுப்பியிருந்தார்.

இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் புகாரை பதிவு செய்த பொலிசார், 3 மணி நேரத்திற்குள் அருணை கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers