நீட் தேர்வால் நேர்ந்த விபரீதம்: 10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி

Report Print Raju Raju in இந்தியா

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார்.

இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற தனியார் கட்டிடத்தின் 10வது மாடிக்கு படியேறி சென்ற அவர், தற்கொலைக்கு முயன்றபோது பலர் கூச்சலிட்டனர். ஆனால் மாணவி கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழகத்தின் பிரதீபா உட்பட சில மாணவிகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரை மாய்த்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers