காலா படத்துக்கு தடை கோரிய மனு மீது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

காலா திரைப்படத்தை தடை செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் உலகெங்கும் 7-ஆம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில் காலா திரைப்படம் தன்னுடைய கதை என கூறிய ராஜசேகர் என்ற நபர் அப்படத்தை திரையிட அனுமதி தரக்கூடாது எனவும் காலாவை தடை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என கூறி ராஜசேகரன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

இதோடு அனைவரும் காலா படத்தை காண ஆர்வமாக உள்ள போது தடை கோருவது ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers