நள்ளிரவில் சென்ற விஜய்! அவர் போட்ட கண்டிஷன் இதுதானாம்

Report Print Fathima Fathima in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

13 பேரின் குடும்பத்தாரையும் சந்தித்த பின்னர் ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கினார்.

இந்நிலையில் தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பாக தன்னுடைய ரசிகர் மன்றத்தினருக்கு கண்டிஷன் போட்டாராம்.

அதாவது, யாரும் படம் எடுக்க வேண்டாம் ப்ளீஸ் என கூறினாராம்.

நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினரே விஜய் ஆறுதல் சொல்ல வேண்டிய வீடுகளின் பயணங்கள் குறித்து திட்டம் வகுத்ததாகவும், சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த விஜய் அங்கிருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றதாகவும் தெரிகிறது.

அங்கே விஜய்யை பார்த்த சந்தோஷத்தில், செல்போனில் படம் எடுக்க முயன்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை சத்தம் போட்டதுடன், நான் துக்க வீட்டுக்கு வந்திருக்கிறேன், படம் எதுவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers