பச்சிளம் குழந்தையை கொன்று உடலை கடலில் வீசிய கொடூர தாயார்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கடலில் வீசிய தாய், 15 நாட்களுக்கு பின்னர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள லோக்மான்ய நகரை சேர்ந்தவர் யஷோதா கிரண் செட்டா (30).

இவருக்கு 9 மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இது மாற்றுத் திறனாளி குழந்தையாகும்.

யஷோதாவின் குடும்பம் ஏழ்மையானது. எனவே மாற்றுத்திறனாளி குழந்தையை அவருடைய குடும்பத்தால் வளர்க்க முடியாது என்று யஷோதா நம்பினார்.

எனவே குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி, கடந்த 18ம் திகதி கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்தார்.

பின்னர் உடலை கல்வாவில் உள்ள கடல் கழிமுகப்பகுதியில் வீசியுள்ளார்.

இதற்கிடையே குழந்தை எங்கே என்று உறவினர்கள் விசாரித்துள்ளனர். அப்போது குழந்தையை சில நாட்கள் தாய் வீட்டில் விட்டு வந்ததாக கூறி யஷோதா சமாளித்துள்ளார்.

சில நாட்கள் சென்ற பின்னரும் குழந்தையை காணவில்லை. இதனால் கணவர் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து குழந்தையை உடனே கொண்டு வர யஷோதாவிடம் கண்டிப்புடன் கூறினர்.

இந்த கட்டத்தில்தான் யஷோதா நடந்த உண்மைகளை கூறினார். மேலும் தானே நகர பொலிசிலும் சரண் அடைந்தார்.

15 நாட்களுக்கு பின்னரே யஷோதா பொலிசில் சரண் அடைந்தார். மேலும் தானே கழிமுகத்தில் இருந்து குழந்தையின் உடலை மீட்குமாறும் யஷோதா பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers