பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
422Shares
422Shares
ibctamil.com

இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதை பேஸ்புக் நேரலையில் செய்துள்ளார்.

மெளசுமியின் தாய் சம்பா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் மெளசுமியின் மரணத்துக்கு அவர் ஆண் நண்பர் தான் காரணம் என கூறியுள்ள அவர் தாய், மகளின் இரண்டு செல்போன்களை பொலிசிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பா கூறுகையில், சம்பவம் நடந்த அன்று மெளசுமிக்கு நிறைய போன் வந்தது, போனில் பேசியபின்னரும், மெசேஜ் அனுப்பிய பின்னரும் அவர் மன அழுத்தத்தில் காணப்பட்டார்.

பின்னர் வெளியில் சென்று ஆண்நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் இரண்டு செல்போன்களை ஆராய்ந்து அதிலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்