எஸ்.வி சேகரை இதனால் தான் இன்னும் கைது செய்யவில்லை: ஆதாரத்துடன் மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

Report Print Raju Raju in இந்தியா
68Shares
68Shares
ibctamil.com

எஸ்.வி சேகர் தலைமை செயலாளரின் உறவினர் என்பதால் தான் அவரை பொலிசார் கைது செய்யவில்லை என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து இழிவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் எஸ்.வி சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை, எந்த வித பதற்றமும் இன்றி அவர் பொது இடங்களில் ஜாலியாக வலம் வருகிறார்.

பொலிசாரே எஸ்.வி சேகருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

இந்நிலையில், இது பற்றி இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் பேச தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் ஸ்டாலின் கூறுகையில், எஸ்.வி. சேகரை கைதுசெய்ய அனுமதி இருந்தும் இந்த அரசு அவரைக் கைது செய்யத் தயங்குகிறது.

அவர், தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால், பொலிஸ் பாதுகாப்புடனே வெளியில் சென்றுவருகிறார்

இதைப் பற்றி இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசியபோது சபாநாயகர் எங்களைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினார்.

இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் எனப் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்