மனைவி இறந்தபின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தகப்பன் கைது: தொடரும் துஷ்பிரயோகம்

Report Print Trinity in இந்தியா
158Shares
158Shares
ibctamil.com

தஞ்சாவூரின் சாலியமங்களப் பகுதியில் மகளை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தந்தை கடந்த ஒருவருடமாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக காவல்துறையிடம் புகார் கூறியிருக்கிறார்.

இந்த புகாரில் தனது தந்தையின் சந்தேக புத்தியால் தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன்பின் ஓராண்டாக தனது தந்தை தன்னிடம் பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து கொடுமைப்படுத்துவதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் தந்தையை போக்ஸ்சா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சாலியமங்கலம் பகுதியில் மீண்டும் ஒரு துஷ்ப்ரயோக செயல் அவரது தந்தையாலேயே நடைபெற்றுள்ளது அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்