மகனுக்கு திருமணம் ஆகவில்லையே... விரக்தியில் உயிரைவிட்ட தாய்

Report Print Raju Raju in இந்தியா
106Shares
106Shares
ibctamil.com

தமிழ்நாட்டில் மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார்.

ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்