18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் இருவேறு தீர்ப்பு- பரபரப்பாகும் தமிழகம்

Report Print Fathima Fathima in இந்தியா
426Shares
426Shares
ibctamil.com

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அதிமுக-வைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.

அதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.

அதில், கடிதம் அளித்தது தொடர்பாக எம்.எல்.ஏ., ஜக்கையன் மட்டும் தனபாலிடம் விளக்கம் அளித்திருந்தார்.

அவரைத் தவிர டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏழாவது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது இந்திரா பானர்ஜி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.

மூன்றாவது தலைமை நீதிபதிக்கு வழக்கை பரிந்துரை செய்தும் உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் 20.09.2017 அன்று நீதிபதி துரைசாமி வழங்கிய இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும், தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என்றும், அவரது தீர்ப்பு வரும் வரை தகுதிநீக்கம் தொடரும் எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்கு முன்பாகவே டிடிவி தினகரன் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்