காலதாமதத்தால் நீதி பயனற்று போகும்? 18 எம் எல் ஏ வழக்கு குறித்து ஸ்டாலின் அதிரடி

Report Print Trinity in இந்தியா
68Shares
68Shares
lankasrimarket.com

காலதாமதம் செய்வதன் மூலம் நீதி பயனற்றதாக மாறி விடும் என்று திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் இருவேறுபட்ட நீதிபதிகளின் முரண் பட்ட தீர்ப்பால் மீண்டும் தள்ளி போடப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. மூன்றாவது நீதிபதி ஒருவர் அமைக்கப்பட்டு அதன்பின்தான் தீர்ப்பு கூற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படி தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் இப்படிப்பட்ட காலதாமத்துடன் வரும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதோடு அதன் முடிவும் பயனற்றதாகிவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பு குறித்து திராவிட கழக தலைவர் கி வீரமணி கூறுகையில் ஜனநாயகம் என்பது தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. அது பிழைக்குமா பிழைக்காதா என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்