என்னை விட்டுப் போயிட்டாளே! ஒரு தாயின் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
218Shares
218Shares
ibctamil.com

நாகர்கோவிலில் கவிதா என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விஜயலெட்சுமி என்ற ஆசிரியை இரண்டு தினங்களுக்கு முன் சரியாகப் படிக்கவில்லை என்று சக மாணவ, மாணவிகள் மத்தியில் கவிதாவை கடுமையாகத் திட்டியுள்ளார்.

மதிய உணவைக்கூட சாப்பிட விடாமல் டார்ச்சர் செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து என் மகள் என்னிடம் சொல்லியபோது, நானே அப்பள்ளிக்குச் சென்று ஆசிரியை விஜயலெட்சுமியைச் சந்தித்தேன், ''என் மகள் முதல் வகுப்பிலிருந்தே இங்குதான் படித்து வருகிறாள்.

இதுவரை நன்றாகத்தான் படித்து வந்திருக்கிறாள். என் மகள் படிக்கவில்லை என்றாலும்கூட நீங்கள் மற்றவர்கள் மத்தியில் அவமானப்படுத்தாதீர்கள். இதனால் என் மகள் சாப்பிடாமல், தூங்காமல் சங்கடப்படுகிறாள்” என்று கூறி வந்தேன்.

ஆனால், மறுநாளும் அதே ஆசிரியை என் மகளை சாப்பிட விடாமல் மற்றவர்கள் முன் அவமானப்படுத்தியிருக்கிறார் என கூறுகிறார் கவிதாவின் தாய்.

சக மாணவிகள் கேலியாக சிரித்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆசையாய், பாசமாய் வளர்த்த என் மகள் எங்களைவிட்டுப் போய்விட்டாள். இதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் பிரச்னை வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க சகல வழிகளிலும் முயற்சி செய்கிறது.

பொலிசார் உண்மையை மறைத்து வயிற்று வலியால்தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என்று எழுதி வாங்குகின்றனர என கண்ணீர் மல்க கூறியுள்ளார் மாணவியின் தாய்.

இறந்த மாணவி வள்ளிக்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து, பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியர், பிரச்னைக்குரிய வகுப்பாசிரியர் ஆகியோரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்