பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் படுகொலை

Report Print Arbin Arbin in இந்தியா
142Shares
142Shares
lankasrimarket.com

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப்.

காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றுள்ளனர்.

குறித்த தகவல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிசார் ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்