10 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி: அதிர வைக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் 10 வயதான சிறுமியை வளர்ப்பு தம்பதியினர் மிக கொடுமையாக துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த தம்பதி முகமது அலி, ஆயிஷா.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், சில ஆண்டுகளுக்கு முன் முகமது அலி இறந்துவிட, அதே பகுதியை சேர்ந்த மெகராஜ் பானு, நசீர் என்பவரிடமும் மூத்த மகளையும், இளைய மகளை வேறொருவரிடமும் விட்டுவிட்டு ஆயிஷா சென்று விட்டார்.

நாளடைவில் மூத்த மகளை பானு, நசீர் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர், கத்திரிக்கோலால் அவளது உடலை கிழித்து, அரிவாளால் தலை மற்றும் உடலில் குத்தி, பிரம்பால் அடித்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 25ம் திகதியும் உச்சந்தலையில் அரிவாளால் கொத்த வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார்.

ரத்தமும் சொட்டிய நிலையில் இருவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்தவளை பார்த்த நபர் ஒருவர் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்தவர்கள், அவளை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமி தெளிவாக உள்ளதாகவும், உடலில் தழும்புகளே இல்லாத இடமில்லை எனவும் மாவட்ட குழந்தைகள் நலத்தலைவர் திலகவதி தெரிவித்துள்ளார்.

மேலும் அவளை பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்