சிறுவர்களை நிர்வாணப்படுத்தி மிகக் கொடுமையாக தாக்கிய பரிதாபம்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜால்கன் மாவட்டத்தில் தலித் அல்லாத சமூக மக்கள் குளிக்கும் இடத்தில் குளித்ததாக கூறி, தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணத்துடன் சிலர் அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அப்போது மொபைல் போனில் வீடியோ எடுத்த போது, அந்த சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்த போது, அவர்கள் அந்த சிறுவர்களை இடைவிடாமல் அடிக்கின்றனர்.

இதில் சிறுவர்கள் வலி தாங்க முடியாமல் வேண்டாம் என்று கதறி அழுகின்றனர். இந்த வீடியோவை குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers