ராஜிவ் காந்தி கொலை! முக்கிய குற்றவாளி இந்த நாட்டில் இருக்கிறார்- சு.சுவாமி தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர்.

கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நாண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கோரிக்கையை நிராகரித்துள்ளார், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இது நடந்ததாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த முடிவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம், அதை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துவிட்டார்.

தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருவதாகவும், அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers