அது உண்மை தான்! நான் திமுகவை ஆதரிக்கிறேன்: பிரபல காமெடி நடிகர் கருணாகரன் பளீச்

Report Print Santhan in இந்தியா

பிரபல காமெடி நடிகரான கருணாகரன் தான் திமுகவை ஆதாரிப்பதாக கூறியுள்ளார்.

சூது கவ்வும், யாமிருக்க பயமே, ஜிகிர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கருணாகரன்.

இவரின் இயல்பான நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது.

இந்நிலையில் சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது, கருணாகரன் திமுக குறித்து பல்வேறு செய்திகளை பகிர்வார்.

இதனால் இவர் திமுகவை ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. தற்போது அதற்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிலளித்துள்ளார்.

அதில், நான் திமுகவை ஆதரிப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அது சரி தான். நான் திமுக ஆதரவாளன் தான். மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டுமென விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்