காதலியை கொன்ற காதலன்- சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம்! நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் காதலியை கொன்று விட்டு மூன்று நாட்கள் சடலத்துடனேயே வாழ்ந்த வந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் ஷிவம் ப்ரிடி(வயது 26) மற்றும் ஜோதி வெர்மா(வயது 22) இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக வசித்து வந்துள்ளனர்.

ஜோதி வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாக வீடு திரும்புவது வழக்கம், இதனால் சந்தேகமடைந்த ஷிவம், ஜோதியை கண்காணிக்க முடிவு செய்தார்.

இதன்படி ஜோதியின் போன் மெசேஜ்களை பார்க்க முயல்கையில், லாக் ஆகி இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் மேலும் அதிகரிக்க கடந்த 9ம் திகதி இரவு இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளது.

கோபத்தில் ஜோதியை கழுத்தை நெறித்து வாயை பொத்தி ஷிவம் கொலை செய்துள்ளார், தொடர்ந்து மூன்று நாட்கள் சடலத்துடன் வசித்த நிலையில், 12ம் திகதி இரவு கார் புக் செய்துள்ளார்.

13ம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் காருக்குள் ஜோதியின் உடலை சூட்கேஸில் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

கெட்ட வாடை வர உடனடியாக அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர், உணவுப் பொட்டலங்கள் என ஷிவம் சமாளிக்க முயன்றாலும், சந்தேகம் இருந்ததால் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

இதனை தெரிந்து கொண்ட தப்பி ஓட முயன்ற ஷிவத்தை பிடித்து பொலிசிடம் ஒப்படைத்தனர், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷிவத்தை பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்