காதலித்து ஏமாற்றிய பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

Report Print Trinity in இந்தியா

சென்னையில் எர்ணாவூர் பகுதியை கவியரசன் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் சரண்யா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் இனைந்து சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றியுள்ள நிலையில் திடீரென சரண்யா கவியரசனுடன் பேசுவதை கவனமாக தவிர்த்து வந்திருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த கவியரசன் சரண்யாவை பின் தொடர்ந்து பார்த்ததில் தனது வகுப்பு மாணவன் ஒருவனுடன் சரண்யா பேசுவது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவன் மூலம் அவர்கள் இருவரும் காதலிப்பதையும் உறுதி செய்து கொண்ட கவியரசன் ஆத்திரமடைந்தார்.

சரண்யாவை கத்திப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வர வைத்து அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவியரசன் திடீரென மறைத்து வைத்த கத்தியை எடுத்து சரண்யாவின் நெஞ்சு , முகம், கை போன்ற பல பகுதிகளில் குத்தியிருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் சந்தேகம் வராமல் இருக்க காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் செய்து உறவினர் பெண்ணை யாரோ கத்தியால் குத்தி விட்டு செல்போனை எடுத்து கொண்டு ஓடி விட்டதாக புகார் அளித்து விட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சரண்யாவை கொண்டு சென்றிருக்கிறான்.

பொலிஸ் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியதால் கவியரசன் தான் கொலை செய்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் குற்றத்தை ஒப்பு கொண்டதால் கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்