கஞ்சா போதையில் சில்மிஷம் செய்த நிர்வாண சாமியார்: புரட்டி எடுத்த திருநங்கைகள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கஞ்சா போதையில் சில்மிஷம் செய்த நாகா பாபா எனப்படும் நிர்வாண சாமியாரை திருநங்கைகள் அடித்து துவைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

நிர்வாண சாமியார்களாகிய நாகா பாபாக்களின் ஆசிரமங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கும்பமேளா காலங்களில் பொது இடங்களில் மண்டையோடுடன் நிர்வாணமாக கஞ்சா புகைத்தபடி வலம் வரும் இந்த நிர்வாண சாமியார்களை பொதுமக்கள் வணங்குவதற்கு போட்டியும் போடுவர்.

இந்நிலையில் ஒரிஷா தலைநகர் புவனேஸ்வரில் நிர்வாண சாமியார் தாக்கப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் 10 திருநங்கைகள் ஒரு நிர்வாண சாமியாரான நாகாபாபாவை தர தரவென இழுத்து வந்து உருட்டுகட்டையால் ஆக்ரோசமாக அடிக்கின்றனர்.

அதன் பின் இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்களிடம் கஞ்சா போதையில் சில்மிஷம் செய்ததாலேயே தாக்கியதாக கூறியுள்ளனர்.

இருப்பினும் பொலிசார் அந்த 10 திருநங்கைகளை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்