காதலுனுக்காக 38 செல்போன்களை திருடிய காதலிகள்

Report Print Trinity in இந்தியா

மும்பையில் ஒரே காதலனுக்காக இரு பெண்கள் செல்போன் திருடியது தெரிய வந்துள்ளது.

மும்பையில் மின்சார ரயில் பயணங்களில் செல்போன் தொலைவது அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக பெண் பயணிகள்தான் இதில் குறிவைக்கப்பட்டனர்.

இந்த திருட்டு தொடர்பாக ரயில்வே பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதனை அடுத்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இந்த செல்போன் திருட்டுகள் அதிகமாக நடந்துள்ளதாக ரயில்வே குற்ற புலனாய்வு துறையினர் கண்டுபிடித்தனர்.

போரிவாளி மற்றும் சாண்டாகுருஸ் எனும் இடத்தில் தான் இந்த் திருட்டுகள் நடைபெற்றன. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பெண் போலீஸ் ஒருவர் கடந்த 30ஆம் திகதி போரிவாளி ரயில் நிலையத்தில் ஏறினார்.

அப்போது ட்விங்கிள் சோனா என்கிற 20 வயது பெண்ணும் டினா என்கிற 19 வயது பெண்ணும் பிடிபட்டனர். அவர்களை விசாரித்ததலில் இது போன்ற திருட்டு செல்போன்களை ராகுல் என்பவரிடம் விற்று 3 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியது தெரிய வந்தது. அதன்பின் ராகுலையும் கைது செய்துள்ளது பொலிஸ் .

மேலும் விசாரித்ததில் இவ்விருவரும் ஹ்ருஷி சிங் எனும் சக கல்லூரி மாணவனை காதலித்ததாகவும் அவனுக்கு செலவு செய்வதற்காகவே இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கல்லூரியில் படித்த படி காதலனுக்காக பார்ட் டைம் திருட்டு வேலை பார்த்த இவ்விரு பெண்களையும் பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்