காதலியின் கண் முன்பே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்: பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் இளைஞர் ஒருவர், தனது காதலியின் கண் முன்பே தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் பேஸ்புக் வாயிலாக கிடைத்த அறிமுகத்தால், பெண்ணொருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண்ணிற்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாக சுரேஷ்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காதலியை நேரில் சந்தித்த சுரேஷ்குமார், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து திடீரென தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அதன் பின்னர், ரத்தம் வழிய படுகாயமடைந்த சுரேஷ்குமாரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers