மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை: பகீர் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் மனம்நலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாத காரணத்தால் கருணைகொலை செய்துவிட்டதாக தந்தை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவசுதீன் என்பவர் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதில் முகமது உஷேன் என்ற மகன் இருக்கிறார்.

ஏழ்மை நிலையிலும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தன்னோடு வைத்தே வளர்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் , இன்று திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது மகனை கருணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் சம்சுதீன்.

இதனையடுத்து அவரை வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை நவசுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி தமது மகனை ஆடு அறுக்கும் கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு, அஜாக்ஸ் மாணிக்கம் நகர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் மழை நீர் கால்வாயில் சடலத்தை வீசி சென்றதாகவும், இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி அந்த சடலத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் பொலிசார், அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின், சடலத்தின் புகைப்படத்தை பொது இடங்களில் ஒட்டி அடையாளம் காண முயற்சித்துள்ளனர்.

புகைப்படத்தை பார்த்த முகமது உசேனின் உறவினர்கள் திருவொற்றியூர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், தானாக வந்து சரணைடைந்துள்ளார் சம்சுதீன்,

மேலும் .தமக்கு பின் தமது மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தானே கருணைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகனை கொலை செய்ததற்காக தந்தை நவசுதீனை கைது செய்த திருவொற்றியூர் பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers