நீட்டை விட அதிக கெடுபிடி தாலியை கழற்ற சொல்லி பரிசோதனை : தொடரும் தேர்வு அவலங்கள்

Report Print Trinity in இந்தியா

காவலர் தேர்வில் முறைகேடுகள் பல நடப்பதால் பல கெடுபிடிகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் உச்சகட்டமாக கட்டியிருந்த தாலியை கழற்ற சொல்லி சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. பல கடுமையான சோதனைகளுக்கு பின்புதான் தேர்வெழுதவே அனுமதிக்கப்பட்டனர்.

இதில் புதிதாக திருமணமான பிரின்சஸ் ஆர்த்தி என்ற தம்பதிகள் அந்த தேர்வெழுத வந்திருந்தனர். ஆர்த்தியின் தாலியை கழற்றி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் புதுமணத் தம்பதியினர் வேதனை அடைந்தனர்.

தேர்வெழுதிய பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தந்தனர். ஆனால் முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு சோதனைகள் செய்வதாக அந்த மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா விளக்கமளித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...