ஜம்மு காஷ்மீரில் அமுலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி

Report Print Fathima Fathima in இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ஆளுநரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து இன்று ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன.

கடந்த சில மாதங்களாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் பாஜக ஆதரவை திரும்ப பெற, பெரும்பான்மை இல்லாததால் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக்கு முன்வராததால் எந்த கட்சியில் ஆட்சியில் இல்லாத சூழல் நிலவியது.

இதனை தொடர்ந்து ஆளுநர் என்.வோரா, ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்தக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளிக்க உடனடியாக ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் 8-வது ஆளுநர் ஆட்சி இதுவாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers