வேறொரு இளைஞருடன் பைக்கில் சென்ற மனைவி: சந்தேகத்தின் உச்சமாய் கணவன் செய்த செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி வேறொரு இளைஞருடன் பைக்கில் சென்றதால், அவரை கொலை செய்ய நண்பர்களுடன் வந்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் வசித்து வருபவர் ரேவதி. இவருக்கும் அதே நகரின் வஉசி தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன்(30) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ரேவதி அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பைக்கில் சென்றதை சுந்தர்ராஜன் பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக தன்னுடைய நண்பர்களான புழல், காந்தி, அஜீத்குமார், சண்முகபாண்டியன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ரேவதி வசித்து வரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதி கிராமமக்களுக்கு தெரியவர, அவர்களை பிடித்து அருகிலிருக்கும் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் சுந்தர்ராஜன், தனது மனைவி மற்றொரு இளைஞருடன் பைக்கில் சென்றதால் சந்தேகமடைந்து அவரை கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers