எங்களை விட்டு போகாதீங்க சார்! கட்டிபிடித்து கதறி அழுது மன்றாடிய மாணவர்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பணியிடை மாற்றம் காரணமாக வேற்று பள்ளிக்கு செல்ல முயன்ற ஆசிரியரை சூழ்ந்து கொண்டு சக மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், இதே பள்ளியில் தான் ஆங்கில ஆசிரியராக பகவான் என்பவர் உள்ளார்.

இந்நிலையில் இவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். இதை அறிந்த மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர் வேறுபள்ளிக்கு செல்லக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பணிமாறுதல் பெற வந்த ஆசிரியரை சகமாணவர்கள் சூழ்ந்து கொண்டு கட்டிப் பிடித்து எங்களை எல்லாம் விட்டு செல்லாதீங்க சார் என்று மன்றாடியுள்ளனர்.

இதைக் கண்ட பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம்இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரையும் கண்ணீர் வரவைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...