பொலிசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பிரபல சின்னத்திரை நடிகை

Report Print Santhan in இந்தியா

பிரபல சின்னத்திரை நடிகை நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து நடிகை நிலானி வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், பொலிஸ் உடை அணிந்து நடிப்பதற்கு வெட்கப்படுவதாகவும், இன்னொரு ஈழம் உருவாகிவிடக் கூடாது எனவும் கூறி வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவியது.

இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவுக்காக குன்னூரில் தங்கியிருந்த நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வீடியோ வெளிவந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பொலிசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல்கள் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து சின்னத்திரை நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ வைரலானதால், அது தொடர்பாக சென்னை வட பழனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பின் வழக்குபதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவாகியிருந்தார். அதுமட்டுமின்றி அவருடைய போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

இதனால் தனிப்படை அமைத்து பொலிசார் தேடி வந்த நிலையில், அவர் குன்னூரில் இருப்பதாக பொலிசாருக்க் தகவல் கிடைத்துள்ளது.

உடனே நேற்றிரவு அங்கு சென்ற பொலிசார் விசாரித்த போது, நிலானி அங்கிருக்கும் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலானி அந்த வீடியோ குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும், பொலிசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆவேசத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். வழக்கை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று பொலிசாரிடம் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்