ரத்தம் கொட்டுகிறது... சாகப்போகிறேன்! தயவுசெய்து தண்ணீர் தாங்க- கொடுமை சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1321Shares
1321Shares
lankasrimarket.com

உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி அவரை கிராமத்து மக்கள் கொடூரமாக அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pilakhuwa மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி, அவரை அந்த கிராமத்து மக்கள் சுற்றிவளைத்தனர்.

தான் அவ்வாறு செய்யவில்லை என்ற அந்நபர் கூறியபோதும், அதனை ஏற்க மறுத்த சிலர் கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாத அவர், என்னை விட்டுவிடுங்கள் என்றும் தயவுசெய்து எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்....எனது உயிர் போகிறது என கெஞ்சியுள்ளார்.

ஆனால், இதனை யாரும் காதில்வாங்கிகொள்ளாமல் ரத்தம் கொட்டிய நிலையிலும், அவனை அடித்து உதைத்ததில் அந்நபர் சுயநினைவு இழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட நபர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சிய நபர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு அப்பாவிகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்கதையாகியுள்ளது.

கடந்த ஆண்டு முகமது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்