மாம்பழத்தால் பறிபோன உயிர்! கதறும் பெற்றோர்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாந்தோப்பு ஒன்று உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் நேற்றைய தினம் அங்கு மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அதனைக் கண்ட மர்மநபர் ஒருவர், சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டு குறித்த சிறுவனின் தலையில் பட்டதால் அவன் பரிதாபமாக மரணமடைந்தான்.

இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாம்பழத்திற்காக சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்