ஐந்து பெண்களை கடத்தி கூட்டு துஷ்ப்ரயோகம் : வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்

Report Print Trinity in இந்தியா

ஜார்கண்ட் மாநிலம் கண்டி பகுதியை சேர்ந்த ஐந்து பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்முறை செய்தவர்களை காவல்துறை தேடி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மனிதர்களின் சம்மதம் இன்றி அவர்களை அடிமைகளாக்கி பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக வீதி நாடகம் போட்ட ஐந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஒரு NGO குழுவை சேர்ந்த ஐந்து பெண்கள் வீதி நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இவர்களை குறி வைத்த கும்பல் ஒன்று இவர்களை கடத்தி பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளது. எங்களை பற்றி வெளியே சொன்னால் வீடியோ வெளியிட்டு விடுவதாக மிரட்டி விட்டும் சென்றிருக்கின்றனர்.

குறிப்பிட்ட பகுதியானது மாவோயிஸ்ட்களுக்கான புகலிடமாக விளங்குகிறது. மேலும் பல்வேறு வித சட்டவிரோத கும்பல்களும் அங்கு செயல்படுவதால் இந்த செயலை செய்த கும்பலை இனம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ராஜேஷ் பிரசாத் கூறுகையில் ஆஷா கிரண் எனும் NGO அமைப்பை சேர்ந்த 11 பேர் கொண்ட குழு குறிப்பிடப்பட்ட கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு நாடகம் போடுவார்கள். அதில் 5 பேரை மட்டும் கடத்திய கும்பல் இவ்வாறு கொடூரமாக செயல்பட்டுள்ளது என்றும்

விசாரணை பல்வேறு விதமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அங்கு உள்ளூருக்குள் அடுத்த நபர்களை வரவிடாத பத்தலக்குடி எனும் இயக்கத்தினர் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

2012 நிர்பயா சம்பவத்திற்கு பின் இந்தியாவில் இதுவரை 39,000திற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் இது போன்ற குற்றங்கள் அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 3 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பின் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவமும் இங்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers