பொலிசாரைத் தாக்கிக் குற்றவாளியைக் கடத்திய கும்பல்: சினிமா பாணியில் நடந்த நிஜ சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

பொலிசாரைத் தாக்கி கைது செய்யப்பட்ட குற்றவாளியை சினிமா பாணியில் கடத்திச் சென்ற சம்பவம் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உலுக்கியுள்ளது.

புதுச்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்த வின்செண்ட் ஜெலன் என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் பேக்கேஜிங் கவர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

அவரைக் கேரளாவைச் சேர்ந்த பினு மற்றும் அவரது சகோதரர்கள், கேரளாவில் நாங்கள் விற்பனை செய்து தருகிறோம் என்று ஆசை காட்டியுள்ளனர்.

வின்செண்ட் ஜெலனும் அதற்கு சம்மதித்து அவர்களுக்கு பொருட்களை அனுப்பியிருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு முறை சரியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பினு சகோதரர்கள் அதன்பின் வாங்கியப் பொருட்களுக்கு பணம் செலுத்தாமல், மொத்தமாகத் தருகிறோம் என்று வின்செண்ட் ஜெலனிடம் கூற அவரும் தொடர்ந்து அவர்களுக்குப் பொருட்களை அனுப்பியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் 38 லட்சம் ரூபாய் வரை பொருட்களை வாங்கிய பினு சகோதரர்கள், அதற்கான பணத்தை செலுத்தாமல் வின்செண்ட் ஜெலனை ஏமாற்றியதுடன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த வின்செண்ட் ஜெலன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

அவரது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் எர்ணாகுளம் புத்தன் குரூஸ் பகுதியில் பதுங்கியிருந்த பினுவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அவனை வேனில் ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பியது. ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு வந்த இரண்டு வேன்கள் சினிமாவைப் போல பினு இருந்த பொலிஸ் வேனை சுற்றி வளைத்தது.

அதிலிருந்து வெளியேறிய குற்றவாளி பினுவின் ஆதராவளர்கள் பொலிஸ் வேனின் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர்.

பின்னர் அந்தக் கும்பல் எஸ்.ஐ உள்ளிட்ட காவலர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு குற்றவாளி பினுவை அழைத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்துத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த புதுச்சேரி பொலிசார், கேரள உள்ளூர் பொலிசாருக்கு தகவல் அளித்தது.

அதன்பின் அங்கு வந்த உள்ளூர் பொலிசார் அடிபட்டிருந்தர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers